சென்னையிலிருந்து சுமார் 145 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஒருசமயம் முருகப்பெருமான், உமையம்மையுடன் கோபம் கொண்டு கயிலாய மலையிலிருந்து திருவேங்கட மலையில் வந்து தங்கினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. "திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே" என்று அருணகிரிநாதர் பாடுகின்றார்.
எனினும், திருப்பதி அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது. அவரையே அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடி வணங்குவோம். |